எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சீர்காழியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் புருஷோத் தலைமையில் நடைபெற்றது.இதில்
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை மிகவும் குறைவாக உள்ளதாகவும், தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆந்திர அரசைப் போன்று ₹6,000, ₹10,000 மற்றும் ₹15,000 என உயர்த்தி வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், உதவித்தொகை கோரி விண்ணப்பித்துக் காத்திருப்போருக்கு உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும், வருவாய்த்துறையை தவிர்த்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாகவே உதவித்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
இந்தj ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது பாதுகாவலர்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.