புதுச்சேரி ஈஷா யோகா மையம் நடத்தும் மாபெரும் கிராமப்புற விளையாட்டு திருவிழாவான 18-வது கிராமோத்சவம் – 2026 (Rural Premier League 2026) இரண்டாம் கட்ட (Divisional) போட்டிகள் நடைபெற்றன. 16 அணிகள் பங்கேற்ற நிலையில், இறுதிப்போட்டியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தென்பள்ளிப்பட்டு அணியும்,

புதுச்சேரி சேர்ந்த குமாரப்பாளையம் வாரியர்ஸ் அணியும் மோதின. இதில் குமாரப்பாளையம் வாரியர்ஸ் அணி முதலிடம் பிடித்து ரூ.15,000 பரிசுத்தொகையை வென்றது. மேலும், அணியின் வீராங்கனை கா.காயத்ரி தொடரின் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டு ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் பரிசை வென்றார்.பரிசுகளை வென்ற குமாரப்பாளையம் வாரியர்ஸ் அணியினர், புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *