புதுச்சேரி அரசின் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் உலகத் தமிழ் மாநாடு புதுவையில் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு மாண்புமிகு முதல்வர் ந.ரங்கசாமி அவர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இவர் கூறியதாவது,..
தமிழ் இலக்கியம், பண்பாடு, தமிழர் கலைகளை உலகிற்கு உணர்த்தும் வகையில் புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என்று தங்களின் அறிவிப்பு புதுச்சேரி மக்கள் மட்டும் அல்லாது,உலகெங்கும் வாழ்கின்ற அனைத்து தமிழர்கள் மனதிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்திய விடுதலை நாள் விழாவிலும், சட்டமன்ற நிகழ்வுகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு முன்னுரிமை அளித்துள்ள தங்களின் செயல்பாடு தமிழ் மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
எப்போதும் மக்கள் நலன் கருதி சிந்தித்து செயலாற்றி வரும் தங்களின் அனைத்துப் பணிகளுக்கும் புதுவைத் தமிழ்ச் சங்கம் என்றும் உறுதுணையாக நிற்கும். புதுவைத் தமிழ்ச் சங்கம் உலகத் தமிழ் மாநாட்டுப் பணிகள் அனைத்திலும் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது என்பதை தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். வரி இல்லாத நிதிநிலை அறிக்கை புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் தமிழ் சொற்பிறப்பியல் ஆய்வுக்கான இருக்கையை அமைத்தது பாராட்டுக்குரிய ஒன்றாகும். புதுச்சேரியில் கல்வி பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசப் பேருந்து வசதி ஏற்படுத்தியது உண்மையிலேயே உயர்கல்வி பெறுவதற்கான ஒரு சிறப்பான திட்டமாகும்.
இதுபோன்று பல்வேறு மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டு இருப்பது பாராட்டுக்குரிய ஒன்றாகும். உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து தமிழுக்கு மகுடம் சூட்டும் பணியில் புதுச்சேரி அரசு முனைப்பாக செயலாற்றி உலகத் தமிழ் மாநாட்டை நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ள மாண்புமிகு முதல்வர் ந.ரங்கசாமி அவர்களுக்கு புதுவைத் தமிழ்ச் சங்கம் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. உடன் தமிழ்ச்சங்க செயலர் சீனு.மோகன்தாஸ், பொறிஞர் மு.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் ப.திருநாவுக்கரசு,அக்ரி கணேஷ், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.