தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் கள ஆய்வு மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

இந்த கள ஆய்வில் வடுகபட்டி பேரூராட்சியில் ரூபாய் 1.52. கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிகளை தரத்தன்மையுடன் விரைவாக கட்டி முடித்து பயன்பாட்டிற்க்கு கொண்டுவர அறிவுறுத்தினார்

எண்டப்புளி புதுப்பட்டியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டு கால்நடைகள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்வுகளில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை துஷார் ஸ்ரீ ஹரி ஷிண்டே கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் நர்மதா பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் கவிதா தேனி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் வில்லியம் ஜேசுதாஸ் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் தமிஹா சுல்தானா நகராட்சி பொறியாளர் மோகன்ராஜ் வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி கிராம ஊராட்சி வடுகபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கல்பனா தேவி பேரூராட்சி மன்ற தலைவர் சி நடேசன் தலைமை இளநிலை உதவியாளர் ஓம் முருகன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *