தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் கண்மாய் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள இந்த கண் மாய் தேனி மாவட்டத்திலேயே மிகப் பெரிய கண்மாய் இந்த கண்மாயில் பல வகையான மீன்கள் வெளிநாட்டுப் பறவைகள் வசித்து வருகின்றன இந்த சிறப்பு வாய்ந்த கண்மாய் பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக போதிய மழை இல்லாததால் கண்மாய் முற்றிலும் வறண்டது.

கண்மாயை சுற்றி பிளாஸ்டிக் மது பாட்டில்களின் கழிவுகள் சூழ்ந்து காணப்பட்டன எனவே இந்த குப்பைகளை அகற்றி கண்மாயை அடுத்து வரும் பருவமழை காலத்துக்குள் சுத்தப்படுத்தி தரவேண்டும் என இப்பகுதி மக்கள் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு கொடுத்தனர்

இதனைத் தொடர்ந்து பேரூராட்சி மன்ற தலைவர் சு. திருப்பதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் யோகஸ்ரீ முன்னிலையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கண்மாயில் இருந்த குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார்கள்

இதில் பழைய டிவி எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பழைய கட்டில்கள் மற்றும் கழிவுகள் இதில் கிடந்தன இதை அனைத்தையும் அகற்றும் பணியில் தற்பொழுது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *