புதுச்சேரி அரசு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
காரைக்கால் மாவட்டம், கீழவாஞ்சூரில் செயல்பட்டு வரும் தனியார் துறைமுக நிறுவனம் சரக்கு கையாளும் திறனை ஆண்டுக்கு 21.5 மில்லியன் மெட்ரிக் டன்னிலிருந்து 100.3 மில்லியன் மெட்ரிக் டன்னாக விரிவுபடுத்துவதற்காக சுற்றுச்சூழல் அனுமதியை பெற விண்ணப்பித்துள்ளது.
இதற்கான திட்ட முன்மொழிவு குறித்து பொதுக் கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் 09.09.2026 காலை 10.00 மணியளவில் திருபட்டினம் போலகத்தில் உள்ள பல்நோக்கு அரங்கில் நடைபெற உள்ளது.
முன்மொழியப்பட்ட திட்டம் அல்லது செயல்பாடு தொடர்பான சுற்றுச்சூழல் அம்சங்களில் நியாயமான அக்கறை அல்லது தொடர்பு உள்ள நபர்கள் தங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாக கூட்டத்திற்கு முன்னதாகவோ அல்லது கூட்டத்தின்போதோ நேரில் முன்வைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால். 9385856800