காரைக்காலில் நாளை மக்கள் மன்றம்
காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது புகார்களை பெற்று உரிய தீர்வு காணும் ‘மக்கள் மன்றம்’ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி நாளை (29.08.2026) சனிக்கிழமை காலை 11.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை காரைக்கால் மக்கள் குடியுரிமை பிரிவு மற்றும் கோட்டுச்சேரி காவல் | நிலையங்களில் ‘மக்கள் மன்றம்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களது புகார்களை நேரில் மனுவாக அளித்து பயன் பெறும்படி மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது
S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால். 9385856800