தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் தன்மை குறித்து சிறு வியாபாரிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது புதிய பேருந்து நிலையத்திற்கு பேருந்து மாற்றப்பட்டதை, மீண்டும் பழைய பேருந்து நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் என வணிகர்கள், பொதுமக்கள் எம்எல்ஏவிடம், கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து நீங்கள் சட்டமன்றத்தில் பேச வேண்டும். தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அழைத்துள்ளோம். இது குறித்து நீங்களும், தமிழக முதல்வரிடம் பேச வேண்டுமென வணிகர்கள் வேண்டுகோள் வைத்தனர். எம்எல்ஏ கஜேந்திரன் இதுகுறித்து முதலமைச்சரிடம் பேசுகிறேன் என உறுதியளித்தார்.