கரூர் செய்தியாளர் மரியான் பாபு

கரூர் மாவட்டம்,​சின்னதாராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளிபாளையம், பாரைக்காடு பகுதியில் சட்டவிரோதமாகச் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவதாகக் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.


​இதையடுத்து அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்ட சின்னதாராபுரம் காவல்துறையினர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட வீராச்சாமி, அஸ்ரப் அலி, பிரேம்குமார் மற்றும் சாமுவேல் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். மேலும், சம்பவ இடத்திலிருந்து இறந்துபோன இரண்டு சேவல்கள் மற்றும் 800 ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.​கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் பின்னர் கைது செய்தவர்களை காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *