புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் செப்டம்பர் 1, 2026 முதல் விடுப்பு விண்ணப்பங்களை eHRMS இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த நடைமுறை புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் உள்ள பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொருந்தும். எனவே, செப்டம்பர் 1, 2026 முதல் அனைத்து விடுப்பு விண்ணப்பங்களும் eHRMS இணையதளம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். அனைத்து ஊழியர்களும் இந்த நடைமுறையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

மேலும், ஆய்வு அலுவலர்கள், அலுவலக மற்றும் கல்வி நிறுவனத் தலைவர்கள் ஆகியோர் இந்த அறிவுறுத்தல்களை தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தெரிவித்து, முறையாகக் கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

S. செய்யது தாஜுல் உசேன்
செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *