கிணத்துக்கடவு, சமர் களம் இந்திய கூட்டமைப்பு சார்பில் முதல் மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி – 2026க்கான வாகை சூட்டு விழா கிணத்துக்கடவு அக்ஷயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் எஸ்.புவனேஸ்வரி அனைவரையும் வரவேற்றார்.

மஞ்சூரியா குங்ஃபூ இன்டர்நேஷனல் தலைவர் மல்லை சி.ஏ.சத்யா, சமர் களம் இந்திய கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் பி.செந்தில்நாதன், சர்வதேச ஷோடோகான் கராத்தே அமைப்பகத்தின் நிறுவனத் தலைவர் ராஜகுரு த.ரவீந்திரன், TNPET & PDA மாநில ஒருங்கிணைப்பாளர் Ptr.இராஜா சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் ஆர்.கதிர்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இப்போட்டியில் தஞ்சாவூர், மதுரை, சேலம், தேனி, சிவகங்கை,சென்னை ,கோவை,விருதுநகர்,நாமக்கல்,ஈரோடுஉள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி ஆகியோர் வெற்றிக் கோப்பைகளை வழங்கி வாழ்த்துரை ஆற்றினர். நிகழ்ச்சியில் கூட்டமைப்பின் பொருளாளர் டி.சீனிவாசன் நன்றி கூறினார்.
இந்தப் போட்டியானது சமர்களை இந்திய கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் பி செந்தில்நாதன் மற்றும் தேசிய பொதுச் செயலாளர் திருமதி புவனேஸ்வரி அவர்களின் ஏற்பாட்டின் படி சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இப்போ போட்டியின் அடுத்த கட்ட நகர்வு வருகின்ற நவம்பர் மாதம் 22ஆம் தேதி ஊட்டியில் தென்னிந்திய அளவிலான போட்டி நடைபெற உள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *