ஓடையில் விரைவில் தூர் வாரும் பணி துவங்கப்படும் பார்வையிட்ட பின்பு மேயர் ஜெகன்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருச்செந்தூர் செல்லும் சாலையிலிருந்து முள்ளக்காடு வரை கோவளம் கடற்கரை பகுதி ஆக செல்லும் ஓடை பகுதியில் தூர் வாராமல் இருப்பதாக பொதுமக்கள் மாநகராட்சி மேயர் ஜெகனுக்கு தகவல் தெரிவித்தனர்
இதனை அடுத்து மாநகராட்சி மேயர் ஜெகன் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று திருச்செந்தூர் சாலையிலிருந்து முள்ளக்காடு வரை மழை வெள்ளம் காலங்களில் நீர் செல்லும் ஓடை தூர்வாராமல் இருப்பதை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்க இருப்பதை அடுத்து உடனடியாக மழை நீர் செல்லும் ஓடை விரைவில் தூர்வாரப்படும் என்று மாநகராட்சி மேயர் ஜெகன் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் உறுதி அளித்தார். உடன் முன்னாள் மாமன்ற உறுப்பினரும் திமுக வட்டச் செயலாளர் ரவீந்திரன். பகுதிச் செயலாளர் சுரேஷ் குமார். மாமன்ற உறுப்பினர்கள் பச்சிராஜன் . ராஜதுரைமற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்