சூழல் சுற்றுலா,தொடர்பான இயற்கை ஆர்வலர்க்களுக்கென கோவையில் வனக்காப்பான் எனும் பிரத்யேக மையம் துவக்கம் நாட்டிலேயே முதன் முறையாக கோவையில் துவங்கப்பட்ட இதில்,வனம் மலைகள் சார்ந்த பயணங்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் ஒரே இடத்தில் நேரடி விற்பனை

சூழல் சுற்றுலா மற்றும் வனப் பாதுகாப்பை மையமாகக் கொண்டு இந்தியாவின் முதல் பிரத்யேக பாதுகாப்பு அங்காடியான ‘வனக்காப்பான்’ கோவை வடவள்ளி, வெள்ளிங்கிரி நகரில் தொடங்கப்பட்டுள்ளது.

சூழல் சுற்றுலா,மலையேற்ற வீரர்கள்,இயற்கை ஆர்வலர்கள் தங்கள் பாதுகாப்பான பயணங்களுக்கான அனைத்து உபகரணங்களும் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில் நேரடி விற்பனை மையமாக வனக்கப்பான் அங்காடி துவங்கப்பட்டுள்ளது..

காட்டுத்தீ தடுப்பு, வனவிலங்கு கண்காணிப்பு, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு, ஜிஎஸ்எம் கேமராக்கள், ட்ரோன் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் மீட்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன பாதுகாப்புத் தீர்வுகள் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து வனக்காப்பான் நிறுவனர் சுமித் சபர்வாள் கூறுகையில், “தொழில்நுட்பம், சமூகப் பங்கேற்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு ஆகியவை ஒன்றிணைந்தால்தான் வனப் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும். நாடு முழுவதும் இதுபோன்ற பாதுகாப்பு மையங்களை உருவாக்குவதே எங்கள் நோக்கம், என்றார்.

துவக்க விழாவில் பங்கேற்ற வனரக்‌ஷக் தலைமை விற்பனை மேலாளர்,ராஜேஷ் சாஹூ,மண்டல மேலாளர் சந்தீப் ஆனந்த்,உற்பத்தி மற்றும் தொழில் நுட்ப மேலாளர் கௌரவ் ஹீர் ஆகியோர் கூறுகையில்,புதிதாக துவங்கப்பட்டுள்ள இந்த நேரடி மையம் வெறும் வர்த்தகம் மட்டும் அல்லாமல்,, சுய உதவிக் குழுக்கள், பெண்கள் தொழில்முனைவோர், பழங்குடியின கைவினைஞர்கள் மற்றும் வனத்தைச் சார்ந்த சமூகங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை உருவாக்கவும் வனக்காப்பான் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்….

இளைஞர்களுக்கு ட்ரோன் இயக்கம், வனவிலங்கு மீட்பு, காட்டுத்தீ தடுப்பு, பாதுகாப்புத் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் செய்முறைப் பயிற்சி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்..

புலிகள் காப்பகங்கள், தேசியப் பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் முக்கிய சூழல் சுற்றுலாத் தலங்களுக்கு அருகிலும் இதுபோன்ற அங்காடிகளை அமைத்து, நாடு தழுவிய வனப் பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.. சூழல் சுற்றுலா, மலையேற்ற வீரர்கள், இயற்கை ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *