அரியலூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது சிறு குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து கோவிலுக்கு வருகை தந்து கிருஷ்ணரை வழிபட்டனர்.
கிருஷ்ணர் பிறந்த நாளை கிருஷ்ண ஜெயந்தியாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது தமிழகத்தில் கிருஷ்ணர் கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது அரியலூர் நகரில் சின்ன கடை வீதியில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் விழா விமர்சையாக நடைபெற்றது.
மூலவர் மற்றும் உற்சவர் கிருஷ்ணருக்கு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் புத்தாடைகள் அணிவிக்கப்பட்டு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது பின்னர் கோவில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட பாலகிருஷ்ணரை ஊஞ்சலில் படுக்க வைத்து ஊஞ்சல் பாட்டு பாடப்பட்டது. தொட்டிலில் ஆடும் கிருஷ்ணரைக்கான நூற்றுக்கணக்கான குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து வருகை தந்தனர்.
ஊஞ்சல் உற்சவம் முடிவுற்ற பின்னர் கிருஷ்ணருக்கு மகாதீபாராதணை காண்பிக்கப்பட்டது. அரியலூர் நகரில் உள்ள திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணரை தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.