நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சி சுள்ளாங்கால் கிராமத்தில் நாகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருப்பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
திருப்பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் கோவில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழா கடந்த 3- ம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து யாக காலை பூஜைகள், மகா பூர்ணாஹதி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை யாகசாலை பூஜைகளை தொடர்ந்து 9.30 மணிக்கு சிவாச்சாரியார்கள் புனித கடங்களை தலையில் சுமந்து ஆலயத்தை சுற்றி வந்து விமான கோபுரங்களை அடைந்து 10 மணிக்கு விமான குடமுழுக்கு நடைபெற்று தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து மூலவர் குடமுழுக்கும் நடைபெற்றது. இதில் சுள்ளாங்கால் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.