கோவை வேடப்பட்டியில் மூத்த குடிமக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள “இன்ஃபினியம் ஒன் லைஃப்” என்ற பிரத்யேக குடியிருப்பு திட்டம் வரும் செப்டம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது..

இந்நலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் , நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில் குமார் மற்றும் இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்…

மூத்த குடிமக்களின் ஓய்வுக்கால வாழ்க்கை என்பது மற்றவர்களை சார்ந்திருக்கும் காலமாக இல்லாமல், சுதந்திரம், பாதுகாப்பு, தோழமை மற்றும் மகிழ்ச்சியுடன் வாழும் புதிய வாழ்க்கையின் தொடக்கமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

வேடப்பட்டியின் இயற்கைச் சூழலில் அமைந்துள்ள இத்திட்டத்தில் 2 மற்றும் 3 படுக்கையறை கொண்ட வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.நடைப்பயிற்சி பாதை, உடற்பயிற்சிக் கூடம், இரு வேறு நிலைகளிலான நீச்சல் குளம், நூலகம், உள் விளையாட்டுகள், சிறிய திரையரங்கம், யோகா தளம், தோட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

மூத்த குடிமக்களின் உடல் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு மருத்துவ முகாம்கள், உடலியக்க சிகிச்சை, செவிலியர் சேவை, அவசர ஊர்தி வசதி உள்ளிட்ட மருத்துவ ஆதரவும் வழங்கப்படுகிறது. மேலும், பாதுகாப்பான நடைபாதைகள், பிடிப்புக் கம்பிகள், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப வசதிகளுடன் எளிதாக செவிலியரை அழைக்கும் வசதி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குடும்பத்தினர், குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகள், தங்களது பெற்றோர் பாதுகாப்பாகவும் சுயமாகவும் வாழ்கிறார்கள் என்ற மனநிம்மதியை பெறும் வகையில் தேவையான பராமரிப்பு மற்றும் ஆதரவு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.“வசிப்பதற்கான இடத்தை மட்டும் உருவாக்காமல், மூத்த குடிமக்கள் தங்களது விருப்பங்களையும், நட்புகளையும், ஆர்வங்களையும் தொடர்ந்து அனுபவித்து மகிழ்ச்சியாக வாழக்கூடிய ஒரு சமூகத்தை உருவாக்குவதே எங்களது நோக்கம்” என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், 15 ஆண்டுகளுக்கும் மேலான கட்டுமானத் துறை அனுபவத்துடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை உருவாக்கிய அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் இன்ஃபினியம் ஒன் லைஃப் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *