தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்கம் மோதிரத் திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை தேனி மாவட்டத்தின் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குனர் ம கோவிந்தராவ் ஆய்வு மேற்கொண்டார். தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலே மக்களின் தேவையறிந்து பல்வேறு திட்டங்கள் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன
இதன் ஒரு அங்கமாக தமிழக அரசின் மெகாத் திட்டமாக தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்காக கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன் பட்டி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக மேலாண்மை இயக்குனர் ம. கோவிந்தராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா வைத்திநாதன் பெரியகுளம் சார் ஆட்சியர் தேவ் லேந்து கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்