தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு முதல் பழைய காயல் வரை உள்ள உப்பளத்தை கையகப்படுத்தி கப்பல் கட்டுதளம் அமைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் உப்பள தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்

இந்த நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழக அரசை எதிர்த்தும் கப்பல் கட்டுதளம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முத்தையாபுரம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு ஓட்டப்பிடாரம் ஒன்றிய விடுதலை சிறுத்தை கட்சி துணைச் செயலாளர் சந்தனகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மண்டல துணைச் செயலாளர் அர்ஜுன். ஆட்டோ கணேசன் மாநிலச் செயலாளர் தொழிலாளர் விடுதலை முன்னணி. முரசு தமிழ் அப்பன் முன்னாள் மாநில இளஞ்சிறுத்தை பாசறை செயலாளர். மாரிமுத்து மாவட்ட செயலாளர் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை. முருகேஸ்வரி மாவட்ட மகளிர் அணி செயலாளர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கப்பல் கட்டு தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம் தமிழக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மண்டல துணைச் செயலாளர் வக்கீல் அர்ஜுன் கூறுகையில் தென் கொரிய நிறுவனமான நிறுவனத்தின் சார்பில் புதியதாக அமைய இருக்கும் கப்பல் கட்டுதளம் எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஒரு வருட காலமாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன்படி விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடியில் மக்களின் உரிமை பாதுகாத்திடவும் உப்பு உற்பத்தி செய்யக்கூடிய பகுதியை கையகப்படுத்தி கப்பல் கட்டுதளம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கடல் சார்ந்த பகுதியான கீழ வைப்பார் முதல் மனப்பாடு வரை கடல் பகுதி உள்ளது மக்கள் பயன்பாட்டில் இல்லாத இடத்தில் கப்பல் கட்டுதளம் அமைக்கப்பட வேண்டும் மீனவ மக்களும் பாதிப்படைகின்றனர். உடனடியாக தமிழக அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். எந்த கட்சி சார்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தாலும் தெரிவிக்க விட்டாலும் விடுதலை சிறுத்தை கட்சி மக்கள் பக்கம் நிற்கக் கூடியவர்கள் கப்பல் கட்டுதளம் கட்ட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் இந்தப் போராட்டத்தில் முழுமையாக நாங்கள் நடத்துவோம் எங்கள் கட்சித் தலைவர் திருமாவளவன் வழிகாட்டுதலின்படி தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது

நாளை தலைவரை சந்திக்க போராட்டக் குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளோம் அப்போது எங்கள் தலைவர் திருமாவளவன் இடம் கோரிக்கையை கண்டிப்பாக கொடுக்க உள்ளோம் மக்கள் பிரச்சனையை தொல் திருமாவளவனிடம் கூறியுள்ளோம் அவரும் உப்பளத்தை பார்வையிட வருகை தருவார் என்று வக்கீல் அர்ஜுன் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *