காரைக்கால், செப்.16-புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையிலிருந்து வரும் செப்.18 (வெள்ளி) அன்று குழந்தைகள் அறுவை சிகிச்சை, இருதயவியல், நரம்பியல் மற்றும் சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவர்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வருகை தந்து காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்க உள்ளனர். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளும்படி காரைக்கால் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
S. செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்