தேனி மாவட்டம் குச்சனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா சென்றார்.
அப்போது, கோவில் வளாகத்தில் முறையாக தூய்மைப் பணிகள் நடைபெறவில்லை என்று பக்தர்கள் சிலர் அவரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அவர் கோவில் வளாகத்தை சுற்றிப் பார்த்தார்.
அப்போது, ஒரு பகுதியில் துணியால் மூடப்பட்ட நிலையில் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடலைச் சுற்றிலும் ஈக்களும், காகங்களும் மொய்த்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ., உடனடியாக அங்கு விரைந்து சென்றார்.
உடலை மூடியிருந்த துணியை அகற்றிப் பார்த்தபோது, சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.மேலும், கோவில் நிர்வாகத்தினரிடம் இதுபோன்ற சம்பவங்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்