நாகப்பட்டினம்,செப்.16-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி காலனி தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் பரசுராமன் (வயது 43). இவர் கடந்த 2019 – ஆம் ஆண்டு தனது மனைவி அனுராதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக திருக்கண்ணபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பரசுராமன் தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரை தூக்கில் தொங்க விட்டது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து காவல்துறை பரசுராமன் மீது கொலை மற்றும் கொலை செய்து மறைத்தார் என வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கில் நாகப்பட்டினம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி வசந்தி இன்று குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கினார் இதில் மனைவியை கொலை செய்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் ரூ.1,000 அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேலும் கொலை குற்றத்தை மறைத்ததற்காக 2 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் ரூ.500 அபராதமும், அபராதம் செலுத்தத் தவறினால் 3 மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதன்படி, குற்றவாளிக்கு மொத்தம் 12 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் ரூ.1,500 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்புவழங்கியது கொலை மற்றும் கொடுங்க குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணிய பாலச்சந்திரா தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *