எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த தொடுவாய் கிராமத்தை சேர்ந்த மாவீரன், கீழமூவர்கரை சேர்ந்த சங்கர், திருமுல்லைவாசலை சேர்ந்த பால்ராஜ், கடலூர் மாவட்டம் சொத்திகுப்பத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் சவுதி அரேபியாவில் தங்கி மீன்பிடி வேலை செய்து வந்துள்ளனர். கடந்த மாதம் 10ஆம் தேதி அதிகாலை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஈரானிய கடற்கொள்ளையர்கள் மாவீரன்,சங்கர் உள்ளிட்டோர் சென்ற படகின் மீதுதுப்பாக்கி சூடு நடத்தியதில் தொடுவாயை சேர்ந்த மாவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

மேலும் இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில் சங்கர் சவுதி அரேபியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 20ம் தேதி உயிரிழந்தார். இருவரு இருவரது உடலையும் சொந்த ஊருக்கு கொண்டு வர அவர்களது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த நிலையில் ஒரு மாதத்திற்கு மேலாக அவர்கள் உடல் சொந்த ஊருக்கு வர கால தாமதமான நிலையில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கையின் இன்று 37 நாட்களுக்குப் பிறகு தொடுவாய் மீனவர் மாவீரன் உடல் சொந்த ஊருக்கு வந்தது அதேபோல் கீழ மூவர்கரை சங்கர் உடல் 27 நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வந்துள்ளது

இருவரது உடலுக்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.இவர்களது உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இதனால் தொடுவாய் கீழ மூவர் கரை மீனவ கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *