கரூர் செய்தியாளர் மரியான் பாபு
பெரியார் அவர்களின் 148-ஆவது பிறந்தநாள் விழா..
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தோழர்களம் அமைப்பின் நிறுவனர் தலைவர் தி.க.சண்முகம் தலைமையில் கரூர் லைட் ஹவுஸ் கார்னரில் உள்ள தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு மலர் தூவி,மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடர் கழக கரூர் மாவட்டத் தலைவர் கு.கி.தனபால், தோழர்களம் மாநில அவைத்தலைவர் இரா.இராஜகோபால் , செயற்குழு தலைவர் ராம்ஜி(எ) தொல்காப்பியன், தலைமை நிலையச் செயலாளர் தமிழன். சு.கவின்குமார் , மாநில இளைஞரணி அமைப்பாளர் க.ஞானவேல், வழக்கறிஞர் க.குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உடன் கரூர் மாவட்டச் செயலாளர் டைகர் ஆர்.ராஜீவ்காந்தி, நாமக்கல் மாவட்டச் செயலாளர் ர.பைஷில் அகம்மது, திருப்பூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மு.கேசவன்,சேதுபதி,பிரபு,பூபாலகன், தங்கவேல்,விடுதலை, முருகேசன்,நித்தீஷ் என பலர் கலந்து கொண்டனர்