தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தினசரி உருவாகும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, சுகாதாரக் கழிவு மற்றும் சிறப்பு வகை கழிவுகள் என 4 வகைகளாக பிரித்து வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன் மற்றும் ஆணையாளர் அசோக் கேட்டுக் கொண்டுள்ளனர்
இது குறித்து சுரண்டை நகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு,
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன்படி பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தினசரி உருவாகும் மக்கும் கழிவுகளான சமையலறை கழிவுகளான, காய்கறி, பழங்கள், பூக்கள், முட்டை ஓடுகள், டீ தூள் மற்றும் காபி தூள் உள்ளிட்ட ஈரக்கழிவுகளை பச்சைநிற கூடைகளிலும், மக்காத கழிவுகளான அட்டைகள், பிளாஸ்டிக் கவர்கள், செய்தித்தாள்கள், துணி வகைகள் உலோகங்கள், கண்ணாடிகள், பேக்கிங் பொருட்கள் உள்ளிட்ட உலர் கழிவுகளை நீலநிற கூடைகளிலும், பயன்படுத்தப்பட்ட டயர்ப்பர்கள். சானிட்டரி நாப்கின்கள், ஆணுறைகள், கறை படிந்த துணிகள், பஞ்சுகள் உள்ளிட்ட சுகாதார கழிவுகளை சிவப்பு நிற கூடைகளிலும், பயன்படுத்தப்பட்ட பெயிண்ட் டப்பாக்கள், பூச்சிக்கொல்லி டப்பாக்கள், பல்புகள், பாதரசம் கொண்ட பிற பொருட்கள் காலாவதியான மருந்துகள், வீட்டு மின்னணு கழிவுகள் உள்ளிட்ட அபாயகரமான கழிவுகளை கருப்புநிற கூடைகளிலும் தனித்தனியாக சேகரித்து அவை உருவாகும் தங்கள் இடத்திலேயே பிரித்து வழங்குவது ஒவ்வொரு குடியிருப்பு வாசிகள் மற்றும் வணிகர்களின் கடமையாகும்.
மேலும் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்கள் வீடுகள் மற்றும் கடைகளில் தினசரி உருவாகும் குப்பைகளை, அவை உருவாகும் இடத்திலேயே 4 வகைகளாக பிரித்து வீடு தேடி குப்பை சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைத்து நகராட்சி பகுதியினை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அதனை தவிர்த்து தெருமுனைகளிலோ, சாலை ஓரங்களிலோ, நீர் நிலைகளிலோ கொட்ட கூடாது. அவ்வாறு கொட்டுவது கண்டறியப்பட்டால் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன்படி அபராதம் விதிப்பதுடன் விதிமுறைகள் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.. பொது மக்கள் மற்றும் வணிகர்கள் நகராட்சி பகுதியினை சுகாதாரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்க நகராட்சி நிர்வாகத்துடன் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளனர் மேலும் நகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன