இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சி பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் ஆகியவற்றை தனித்தனியாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அபிராமம் பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) திருமதி.செ.மாலதி கூறியிருப்பதாவது : தமிழ்நாடு பேரூராட்சிகளின் இயக்குனர். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சிவகங்கை மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி அபிராமம் பேரூராட்சி பொதுமக்களுக்கு தெரிவிக்கும் செய்தி என்னவென்றால்
அபிராமம் பேரூராட்சிப் பகுதியில் தூய்மை பணியை மேம்படுத்தும் நோக்கில் பேரூராட்சி நிர்வாகம் புதிய மற்றும் கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள குப்பைகளை நாள்தோறும் மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என்று இரண்டு பிரிவுகளாக தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் .


மேலும் ஆபத்தான மருத்துவ கழிவுகள், பயன்படுத்தப்பட்ட பேட்டரிகள், டியூப் லைட்டுகள், மின்னணு கழிவுகள், நாப்கின்கள் மற்றும் முககவசங்கள் போன்றவற்றை சாதாரணக் குப்பைகளுடன் கலக்காமல் தனியாகச் சேகரித்து வழங்க வேண்டும் வருகிற அக்டோபர் 1ம் தேதி முதல் குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்கத் தவறும் பட்சத்தில், உங்கள் வீடுகளில் இருந்து திடக்கழிவுகள் பெறப்பட மாட்டாது.


அபிராமம் பேரூராட்சி பொதுமக்கள் அனைவரும் பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த தூய்மை பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபிராமம் பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) திருமதி.செ.மாலதி அவர்கள் அந்தச் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *