பள்ளித்தென்னல்:
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், பள்ளித்தென்னல் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் தொண்டு அறக்கட்டளை, ஸ்ரீ சிவசக்தி தர்ம அறக்கட்டளை, தென்னல் சத்குரு கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் நினைவாக மற்றும் ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் ஆகியவற்றின் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு டாக்டர் சுகந்தி பிரபாகர் தலைமை தாங்கி, இலவச கண் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, முகாமில் கண் பரிசோதனை செய்து கொண்டவர்களில் 150க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக அறக்கட்டளை நிறுவனர் மற்றும் ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் புதுச்சேரி தலைவர் கே. ராஜாராம் குமார், புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் (CEO) ஹரிதாஸ்,மற்றும் விக்னேஷ், தாமரை ஒலி நிருபர் சக்திவேல், சமூக சேவகர்கள் ஜனார்த்தனன், சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினர்.

இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள், ஸ்ரீ சிவசக்தி தர்ம அறக்கட்டளை நிர்வாகிகள், ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் மற்றும் அன்னை கண் மருத்துவமனை சார்பில் திரு. சுப்ரமணியன், விக்னேஷ், கிருத்திகா, கஸ்தூரி, சாந்தி, ஈஸ்வரி, தாட்சாயனி, இந்துமதி, சௌந்தர்யா, விஷ்வ ரூபியா, ஷாலினி, நிலாமுகி, புவனேஷ்வரி, பவித்தா, சுஷ்மிதா, கீர்த்திகா, விஜய லலிதா, திவ்யா, ஆர்த்தி உள்ளிட்ட ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *