கோயமுத்தூர் மாவட்ட கார் டிரேடர்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் சார்பில் 11-வது மெகா பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை மேளா, கோவை திருச்சி சாலையில் உள்ள வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் செப்டம்பர் 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தக் கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கார் விற்பனையாளர்களின் 300-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
சிறிய ரக கார்கள் முதல் உயர்தர கார்கள் வரை பல்வேறு வகையான கார்கள், ரூ.50 ஆயிரம் முதல் பல்வேறு விலை வரம்புகளில் இடம்பெற்றுள்ளன.கண்காட்சி தொடங்கி நான்கு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கார் வாங்க பொதுமக்கள் மற்றும் கார் பிரியர்கள் ஆர்வத்துடன் வருகை தந்து வருகின்றனர். இதுவரை 50-க்கும் மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
பழைய காரை மாற்றிக் கொள்ளும் வசதி மற்றும் ‘பார்க் அண்ட் செல்’ வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மேளாவில் வாகன ஆவணங்கள் சரிபார்ப்பு, வங்கி கடன் வசதிக்கான உதவி உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகின்றன.குறிப்பாக தமிழகம் முழுவதும் இலவசமாக உரிமையாளர் பெயர் மாற்றம் செய்து தரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 22-ம் தேதி கண்காட்சி நிறைவடைய உள்ள நிலையில், பயன்படுத்தப்பட்ட காரை வாங்க விரும்புபவர்கள் தங்களது தேவைக்கும், வரவு செலவுத் திட்டத்திற்கும் ஏற்ற கார்களை ஒரே இடத்தில் பார்வையிட்டு தேர்வு செய்யும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் தொடர்புக்கு
7092920021 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது…