புதுவை தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட நாளை முன்னிட்டு திங்கள்தோறும் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற நிகழ்விற்கு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார். கல்விச்செம்மல் செயலர் சீனு.மோகன்தாசு வரவேற்புரை நிகழ்த்தினார்.
கலை மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பெ.ராஜவேலு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வைத் தொடங்கி வைத்து அனைவருக்கும் திருக்குறள் நூலினை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பொருளாளர் கலைமாமணி மு.பாலசுப்பிரமணியன் துணைத் தலைவர்கள் ப.திருநாவுக்கரசு கோதண்டபாணி, துணைச் செயலாளர் பொறியாளர் மு.சுரேஷ்குமார், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முனைவர் இரா.அருள்ராஜ் கலைமாமணி எம்.எஸ். ராஜா , அ.சிவேந்திரன், ஜெயந்தி ராஜவேலு, ஆனந்தராசன் மற்றும் தமிழ் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.