செங்கோட்டை செப். 21.

செங்கோட்டை – சென்னை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 23-ம் ஆண்டு தொடக்க விழா செங்கோட்டை ரயில் நிலையத்தில் நடந்தது. கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு.ராசேந்திரன்,MABL கலந்து கொண்டு ரயில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார் செங்கோட்டையிலிருந்து சென்னை எக்மோர் வரை செல்லும் அதிவிரைவு பொதிகை ரயில் தென்காசி மாவட்ட மக்களின் மிகப் பெரும் கனவாக இருந்த நிலையில் இந்த ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு 23 ஆண்டுகள் கடந்த நிலையில் பொதுமக்களின் ஏகோபித்த தொடர்வண்டியாக இருந்து வருகிறது சாதாரண மக்கள் முதல் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலானது சிறப்பான போக்குவரத்தை தருவது குறிப்பிட்டத்தக்கது


இந்நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ரஹீம் ஆகியோர் கலந்து கொண்டு பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து ரயில் என்ஜின் ஓட்டுநர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் நிலைய மேலாளர் ராமச்சந்திரன், ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் செந்தில், ரோட்டரி கிளப் நிர்வாகிகள், அனிதா ஆனந் ஹரிஹரன் தென்காசி மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பகுருதீன் பாவா அமீன் உட்பட ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *