மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம்
தென்காசி செப்டம்பர் 21.
தென்காசி மாவட்டம் குற்றாலம் அனைத்து அருவிகளிலும் நேற்று இரவு முதல் மழையின் காரணமாக அனைத்து அருவிகளான பழைய குற்றாலம் புலி அருவி சிற்று அருவி ஐந்தருவி பிரதான அறிவி ஆகிய அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் நேற்று நீர்வரத்தின் அளவைக் கொண்டு குளிக்க தடை விதித்த நிலையில் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலில் ஈடுபட்டு வருகின்றனர் . அண்டை மாநிலமான கேரளாவில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அதனை ஒட்டி அமைந்துள்ள புளியரை குற்றாலம் தென்காசி ஆகிய பகுதிகளில் கடந்த இரு தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது