மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம்

தென்காசி செப்டம்பர் 21

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில்
ரோட்டரி கிளப் ஆஃப் செங்கோட்டை கேலக்ஸி சார்பாக, செங்கோட்டை RPF ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் முருகன் மற்றும் பெண் காவலர் .மின்னு சசி ஆகியோரின் பொறுப்பான கடமையை பாராட்டி செங்கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து அவர்களுக்கு நற்சான்றிதழும் கேடயமும் வழங்கும் விழா நடைபெற்றது.


கடந்த ரயில் பயணிகள் தவறவிட்ட பல லட்சம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் காசோலை அடங்கிய கைப்பையை மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைத்த நேர்மையான செயலுக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வந்த நிலையில் ரோட்டரி சங்கத்தின் சார்பாக விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது


இவ்விழாவில் ரோட்டரியின் துணை ஆளுநர் Rtn.PHF.அனிதா ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தலைவர் ஹரிஹர நாராயணன் தலைமை தாங்கினார். செங்கோட்டை RPF காவல் நிலைய ஆய்வாளர் திரு. செந்தில் அவர்கள் வரவேற்றார்.


நிகழ்ச்சியில் பேசிய ஆய்வாளர்,”இந்த 20.09.26ம் நாள் RPF ன் 42 வதுஎழுச்சி நாள்” என்பதோடு ரோட்டரியின் நற்சேவைக்கான பாராட்டு விழாவும் சேர்ந்தது பெரு மகிழ்ச்சி. அத்தோடு இன்று பொதிகை ரயிலுக்கு 23 வது பிறந்தநாள்… என்றும் கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திமு.ராசேந்திரன் MABL அவர்கள் கலந்து கொண்டு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கு பொன்னாடை போற்றி வாழ்த்துக்களை கூறினார் . மேலும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு . ராசேந்திரன் கலந்து கொண்டு விருது பெற்றவர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவித்தார்


விழாவில் RPF அலுவலக வளாகத்தில் செங்கோட்டை ரோட்டரி கிளப் ஆஃப் கேலக்ஸி நிர்வாகிகளால் மரக்கன்றுகள் நடப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *