செந்துறையில் வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க ஆண்டு விழா அரியலூர் மாவட்டம் செந்துறை வட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் 27 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடந்தது வருகை தந்த அனைவரையும் சங்க செயலாளர் அ குப்புசாமி வரவேற்று பேசினார் தலைவர் ரெ தங்கவேல் தலைமை தாங்கினார்
தர்மராஜ் பெருமாள் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர் அமைப்பு செயலாளர் இளங்கோவன் ஆண்டறிக்கை வாசித்தார் பொருளாளர் ப சிதம்பரம் நிதிநிலை அறிக்கை வாசித்தார் தமிழ் செம்மல் அய்யம்பெருமாள் முன்னாள் தலைவர்கள் முத்துவேல் சின்னப்பா முனைவர் முருகேசன் வேளாண்மை துறை அரங்கஇளவரசன் இணை செயலாளர் சாமுண்டியான் அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க தலைவர் சிவசாமி, செயலாளர் மகாலிங்கம் பொருளாளர் கோடீஸ்வரன் தமிழ் மாநில மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்க நிறுவனர் தலைவர் அரியலூர் நல்லப்பன் நல்லாசிரியர் பாலசுந்தரம் முசிறி சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் மாநில துணைத்தலைவர் மாணிக்கம்ராமசாமி ஸ்டேட்பேங்க் மேலாளர் பாரிவள்ளல்பழனிமுத்து உதவி கருவூல அலுவலர் சுரேஷ்குமார் முனைவர் ராமதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள் முன்னாள் செயலர் ராஜவேல் அனைவருக்கும் நன்றி கூறினார் 75 அகவை முடிந்த ஓய்வூதியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தப்பட்டது திருச்சி மேக்ஸி விஷன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் மருத்துவ சிறப்பு முகாம் நடந்தது பிஆர்ஓ சதீஷ்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்