நாமக்கல் அடுத்துள்ள பாலப்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் இன்று பழ கூடைகள் வைத்து ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், தங்களது கிராமம் செல்லப்பம்பட்டி ஊராட்சியில் உள்ளது.
செல்லப்பம்பட்டி ஊராட்சியில் அதிக மக்கள் தொகை உள்ளது. இதனால் அரசு சேவைகளை பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக கிராம நிர்வாக அலுவலகம் உட்பட அனைத்தும் தொலைவில் உள்ளதாகவும் எனவே மேற்கு பாலப்பட்டி, கிழக்கு பாலப்பட்டி பகுதியை இணைத்து புதிய ஊராட்சியை ஏற்படுத்த வேண்டும், அதற்காக வருகின்ற அக்டோபர் 2 நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வருகை தர வேண்டும் எனவும் அதற்காக கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்க பழ கூடை வழங்கி ஆட்சியரை வரவேற்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.