தமிழக முதல்வர் விஜய் சென்னை திருவான்மியூர் காந்தி கிராமம் நடுநிலைப் பள்ளியில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் விரிவாக்கம் தொடங்கி வைத்தைத் தொடர்ந்து தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல சிந்தலைச்சேரி அரசு மேல் நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா வைத்திநாதன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில் மாணவர்களுக்கு காலை உணவினைப் பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தி ருசி பார்த்தார்கள்.
இந்த திட்டத்தின் மூலம் தேனி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள 168 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 13363 மாணவ மாணவிகளும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள 50 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 4636 மாணவியர்களும் நகராட்சி பகுதிகளில் உள்ள 85 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 12
057 மாணவியர்களும் என்று மொத்தம் 303 பள்ளிகளில் பயிலும் 30.056 மாணவர்கள் பயனடைவார்கள்
இந்த நிகழ்வில் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துஷார் ஸ்ரீ ஹரி ஷிண்டே திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் வீராச்சாமி முதன்மை கல்வி அலுவலர் முருகன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு சுப்புராம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதவி உதவி திட்ட அலுவலர்கள் ஆசிரியர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.