பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் ஒன்றியம், கேத்துரெட்டிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வேப்பிலைப்பட்டி கிராமத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக தூய்மை பணியாளர்கள் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீதியிலும் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு, கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும், பொதுமக்கள் துணி துவைக்கும் போது கழிவுநீர் செல்லும் வகையில் முறையாக பயன்படுத்த வேண்டும் என்றும், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க, பொதுமக்கள் பாதாள சாக்கடை மற்றும் முறையான கழிவுநீர் வடிகால் வசதிகளை பயன்படுத்த வேண்டும் எனவும், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு பொதுமக்களும் உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *