துறையூர் செப்-22
திருச்சி மாவட்டம் துறையூர் பெரம்பலூர் பைபாஸ் சாலை அருகே உள்ள லக்கி மஹாலில் மாநில அளவிலான பொறியாளர்கள் தின விழா (செப்டம்பர் -20) பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி தமிழ்நாடு கட்டுமான அனைத்து பொறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்து மாநில கூட்டமைப்பின் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
இதில் மாநில பொறியாளர்கள் தின விழா குழு தலைவர் மணிகண்டன் மண்டலம் நான்கின் தலைவர் சத்தியமூர்த்தி,செயலாளர் அறிவழகன், துறையூர் கட்டிட பொறியாளர்கள் சங்கத் தலைவர் அன்பு காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. தொடர்ந்து முன்னாள் மாநில நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டு மாநில டைரி வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் புதிய சங்கங்களை கூட்டமைப்பில் இணைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பொறியாளர் கவுன்சில் அமைக்கப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த விழாவில் மாநில நிர்வாகிகள் தனபால்,அருள், கர்ணன்,பிரபு, வைத்தியநாதன், சிவக்குமார், மாரியப்பன், ராகவன், ஆகியோர் வரவேற்பு உரையாற்றி சிறப்பித்தனர்.விழாவில் துறையூர் கட்டிட சங்க பொறியாளர்கள் மற்றும் மாநில சங்கங்களின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை துறையூர் பொறியாளர்கள் மகாராஜா, மணப்பாறை கண்ணன், முசிறி பூபதி, சங்கர், துறையூர் செயலாளர் ஞானவேல், பொருளாளர் பிரித்வி மற்றும் துறையூர் சங்க பொறியாளர்கள் அனைவரும் மேளத்தாளங்களுடன் பிரமாண்டமாக செய்திருந்தனர்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு விருந்தளிக்கப்பட்டது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்