அரியலூர் வள்ளலார் கல்வி நிலையத்தில் முப்பெரும் விழா அரியலூர் லிங்கதடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் எழுத்தாளர் சங்கத்தின் 29 ஆவது செயற்குழு கூட்டமும் அண்ணா பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் கவி முரசு ராஜா ராம் எழுதிய திருக்குறள் விளக்க உரை நூல் ஆய்வு அரியலூர் மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஏழு ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது
விழாவிற்கு சங்கத்தின் நிறுவனர் தலைவர் கவி முரசு ராஜாராம் தலைமை தாங்கினார் முதுபெரும் காங்கிரஸ் தலைவர் சீனி பாலகிருஷ்ணன் வள்ளலார் கல்வி நிலையத்தின் செயலாளர் கொ வி புகழேந்தி துணிச்சபாடி காந்திராம் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை ரெ ரேணுகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கல்வி நிலைய தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் சங்க அமைப்புச் செயலாளர் மங்கையர்க்கரசி அனைவரையும் வரவேற்றுப் பேசினார் சே அறச்செல்வி அனைவருக்கும் நன்றி கூறினார் அண்ணாவின் புகழ் பாடிய எழுத்தாளர் சங்க மக்கள் தொடர்பு அலுவலர் ஆசிரியர் அரியலூர் நல்லப்பன் பெரியார் புகழ் பாடிய இணைச் செயலாளர் கவிஞர் இளஞ்செழியன் அவர்களுக்கும் லிங்கத்தடிமேடு பள்ளியின் செயலாளர் கொ வி புகழேந்தி பொன்னாடை போர்த்தி பாராட்டினார்
இந்த ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற த பொட்டகொள்லை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ம கருணாநிதி பரணம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் ரா சேதுராமன் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் மா விஜயலட்சுமி மணகெதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மு சிலம்புச்செல்வி கோவிந்தபுத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் க மல்லிகா விளாங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மு நளினா ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் செ செந்தமிழ்செல்வி ஆகியோருக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சீனி பாலகிருஷ்ணன் பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கினார் அகில இந்திய மக்கள் சேவை பிரிவு தலைவர் தங்க சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் கவிமுரசு ராஜாராம் ஏற்புரையாற்றும் போது 1330 குறளையும் முற்றோதல் செய்யும் மாணவ செல்வங்களுக்கு ரூ 15000 ஊக்க தொகை அளித்து நற்சான்றிதல் வழங்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது அத்துடன் நில்லாது அந்த மாணவசெல்வங்களுக்கு 10 ஆம் 12 ஆம் வகுப்பு பொது தேர்விலும் தமிழ் பாடத்தில் ஐந்து மதிப்பெண் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மற்றும் சார் என்று அழைக்க வேண்டிய இடத்தில் அய்யா என்று அழைத்து பழக பொதுமக்களை வலியுறுத்தும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது இதுவரை ஆங்கிலத்தில் கையொப்பம் இட்டவர்களும் இனி தமிழில் கையொப்பமிட்டு பழக பொதுமக்களை வலியுறுத்துவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது