திருச்சி: சிந்துவெளி ஆய்வு மையம் சார்பில் “ஒரு பண்பாட்டின் பயணம் – காவிரிக்கரையின் தூரிகை மொழி” என்ற தலைப்பிலான காபி டேபிள் நூல் வெளியீட்டு விழா செப்டம்பர் 26-ஆம் தேதி
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஹோட்டல் ரம்யாஸ், சௌபாக்யா குளிர்மை அரங்கில், காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.
சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் டாக்டர் சுந்தர் கணேசன் முன்னிலையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் சிந்துவெளி ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன் ஒரு பண்பாட்டின் பயணம் – காவிரிக்கரையின் தூரிகை மொழி புத்தகத்தை
வெளியிடுகிறார். “ஒரு பண்பாட்டின் பயணம் – காவிரிக்கரையின் தூரிகை மொழி” என்ற இந்நூல், காவிரிக்கரையை மையமாகக் கொண்ட பண்பாடு, கலை மற்றும் மரபு சார்ந்த பதிவுகளை காட்சிப்படுத்தும் வகையில் காபி டேபிள் நூலாக உருவாக்கப்பட்டுள்ளது.
பண்பாடு, வரலாறு, கலை மற்றும் பாரம்பரிய ஆவணங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்நூல் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் வரலாற்று ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் மற்றும் முதல்வர் திருமதி நஸ்ரத் பேகம் செய்து வருகின்றனர்