துறையூர் செப்-22
திருச்சி மாவட்டம் துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் 22-09-2026அன்று காலை 10-30 பணியில் இருந்து மாலை 4மணி வரை பத்துக்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்பட்டதாகவும் அதனால் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு லைசென்ஸ் உரிமம் சம்பந்தமாக வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டதாக வேதனை தெரிவித்தனர்.இதனால் பரப்பரப்பு காணப்பட்டது.
வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே மோட்டார் வாகன ஆய்வாளர் வருவதால், அந்த இரண்டு நாட்களில் நூற்றிற்கும் மேற்பட்ட வாகனங்களின் எப்சி உள்ளிட்ட சான்றிதழ்களை சரிபார்க்கவே நேரம் போதவில்லை.இதனால் பர்மிட் இல்லாத வாகனங்கள்,அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் உள்ளிட்ட பனிகளை ஆய்வு செய்லதில்லை என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆகவே துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு தனியாக ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் சதாசிவத்திடம் கேட்ட பொழுது, இன்று காலையிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட தடவை மின்தடங்கள் ஏற்பட்டதால் கம்ப்யூட்டரை இயக்க முடியவில்லை எனவும்,இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் போன் செய்து கூறியும் தகுந்த முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை,அதனால் மோட்டார் வாகன பணிகள் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசும் பொழுது மின்தடங்கள் ஏற்படும் பொழுது ஜெனரேட்டர் வசதி வேண்டும் என்று ஸ்ரீரங்கம் மோட்டார் வாகன அலுவலகத்திற்கும் தமிழக அரசுக்கும் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இதனால் வரை தமிழக அரசும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் செவி சாய்க்கவில்லை, நாங்கள் என்ன செய்ய முடியும்,நானே பெரம்பலூர் அலுவலகம் வேலை பார்த்து கொண்டு வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் பகுதி நேரமாக துறையூர் அலுவலகத்திற்கு வந்து நிற்க நேரமில்லாமல் வேலை பார்க்கிறேன்,நான் என்ன செய்வது என்று சகிப்போடு பதில் கூறினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்