தாராபுரத்தில் திமுக வேட்பாளா் சுகன்யாவை ஆதாித்து ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு


தூத்துக்குடி தமிழகத்தில் தாராபுரம் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6ம் தேதி சட்டமன்ற இடைத்தோ்தல் நடைபெறுகிறது. அத்தொகுதியில் திமுக வேட்பாளராக சுகன்யா போட்டியிடுகிறாா். திமுக தலைவா் முக.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க அவரது வெற்றிக்கு உழைப்பது குறித்து இதனையொட்டி தாராபுரம் தோ்தல் காாியாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்தில் திமுக முதன்மை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நேரு எம்.எல்.ஏ, திமுக துணைப்பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சாமிநாதன், ராசா எம்.பி, திருப்பூா் கிழக்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், துணைசெயலாளர் முத்துக்குமாா், தலைமை செயற்குழு உறுப்பினா் தனசேகா், உள்ளிட்டோா் திமுக வேட்பாளாின் வெற்றிக்கு தங்களுக்கு ஒதுக்கப்படும் பகுதியில் திமுக ஆட்சியில் நடைபெற்ற திட்டங்கள் சாதனைகள் குறித்து எடுத்துக்கூறி வாக்காளா்களிடம் வாக்கு சேகாிப்பது தவெக ஆட்சியில் தொடரும் கொலை கொள்ளை பாலியல் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை எடுத்துக்கூறுவது என்று முடிவு செய்யப்பட்டது.


கூட்டத்தில் ஓன்றிய செயலாளா் இளையராஜா மாநகர திமுக துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் செந்தூா்மணி, பகுதி செயலாளர் சுரேஷ்குமாா், முன்னாள் விவசாய அணி துணை அமைப்பாளர் ஆவுடையப்பன், வக்கீல் பூங்குமாா், பகுதி பிரதிநிதிகள் பிரபாகா் ஜேஸ்பா் லிங்கராஜா மற்றும் கருப்பட்டி பாலா, உள்பட பலா் கலந்து கொண்டனா்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *