தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

சந்திராபுரத்தில் வாகன சோதனை: ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.84 லட்சம் பறிமுதல்.

தாராபுரம்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே சந்திராபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு நேரத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை முறைகேடாக விநியோகிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, சந்திராபுரம் பகுதியில் எப்.எஸ்.டி-3 ஏ-பறக்கும் படையினர் அதிகாலை நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்தக் குழுவில் குண்டடம் வட்டாரக் கல்வி அலுவலர் ராசாமணி, சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன், முதல்ள் நிலைக் காவலர் தங்கம் மற்றும் ஒளிப்பதிவாளர் ஹரி பிரசாந்த் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அப்போது கேரள மாநிலத்தில் இருந்து தளவாய்பட்டிணம் நோக்கி வந்த பி.எம்.டபிள்யூ. சொகுசு காரை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்போது, காரின் முன்புற டேஷ்போர்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 500 ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி பணத்தை உரிய நடைமுறைகளுடன் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சம்பவம் அலங்கியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்தல் காலத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் அதிக அளவில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பது குறித்து தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *