திருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, இந்திரா கணேசன் பிசியோதெரபி கல்லூரிதிருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன் லயன்ஸ் கிளப்புடன், திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் கிளப் மற்றும் திருச்சிராப்பள்ளி விஷன் லயன்ஸ் கிளப் இணைந்து திருச்சி மேக்குடிசாய்பாபா கோயில் அருகே இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்,சங்க நிர்வாக அலுவலர் ஹரி பிரசாத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.இந்திரா கணேசன் சித்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சித்த மருத்துவர்
லதா பேசுகையில்,நாம் உண்ணும் உணவே உயிர் உடலிலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத வாழ்க்கை முறையும் மற்றும் முறையில்லாமல் உண்பதனாலும் நோய்கள் உற்பத்தியாகின்றன.
நம் உடலில் வளி, அழல் மற்றும் ஐயம் இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் தோன்றக் காரணமாக அமையும். இவைகளை வாத, பித்த, கப நோய்களாக பிரிக்கப்படும் அதற்கு தகுந்தார் போல் சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.இம்முகாமில், சித்த மருத்துவர்கள் நீலகண்டன், ஸ்ரீநிதி , வர்மா செல்வகுமார்
பொதுமக்களுக்கு இலவசமாக மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.முகாமில் பொது மருத்துவ ஆலோசனை, ரத்த அழுத்தப் பரிசோதனை, ரத்தச் சர்க்கரைப் பரிசோதனை, பிசியோதெரபி ஆலோசனை உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன. தேவையானவர்களுக்கு இலவசமாக சித்தமருந்துகள் வழங்கப்பட்டன.