மாவட்டச் செய்தியாளர் முகமது இப்ராகிம்

தென்காசி, செப்டம்பர். 25:

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பள்ளிக்கூடத் தெருவில் தச்சுப் பட்டறை குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பள்ளிக்கூடத் தெருவில் ராமச்சந்திரனுக்கு சொந்தமான தச்சுப் பட்டறை குடோன் உள்ளது. இங்கு கட்டுமானப் பணிகளுக்கான ஜன்னல் நிலைகள், கதவுகள் உள்ளிட்ட மரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில், நள்ளிரவு சுமார் 1 மணியளவில் குடோனில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கடையநல்லூர் காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, தீயணைப்புத் துறை மீட்புப் படையினர் ஷேக் அப்துல்லா தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள்கொண்டு வந்தனர்


கார் செட்டுக்கும் தீ பரவல் குடோனுக்குப் பின்புறம் உள்ள சக்தி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த வைரவன் என்பவருக்குச் சொந்தமான கார் செட்டுக்கும் தீ பரவியது. இதையடுத்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை அவசரமாக வெளியேற்றினர்.


எனினும், கார் செட்டின் முன்பகுதி முழுவதும் தீயில் எரிந்து சேதமடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த பழைய மரச்சாமான்கள், மின்மோட்டார்கள் உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து நாசமானதாகக் கூறப்படுகிறது. மேலும், அருகிலுள்ள வீட்டின் சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து குடோன் உரிமையாளர் ராமச்சந்திரன் கூறுகையில்,

வீட்டு கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்காக பல்வேறு வீடுகளுக்குத் தேவையான மரச்சாமான்கள் தயாரிக்கப்பட்டு, பணிகள் முடிந்த நிலையில் குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கு இருந்த இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானதால், சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த விபத்து குறித்து கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *