முதுகுளத்தூர்
செய்தியாளர்
ஆர்.செந்தில்குமார்
ராமநாதபுரம், செப்.25
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான தமிழக முதல்வர் கோப்பை பொதுப்பிரிவிற்கான இறகு பந்து போட்டியில்தொண்டி அஹமத் யாசின், அட்லின் ஷெரின் அசத்தல் சாதனை புரிந்துள்ளனர்.
ராமநாதபுரம் சீதக்காதி உள்விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான பொதுப்பிரிவு இறகுப்பந்து (Badminton) போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன.இப்போட்டிகளை ராமநாதபுரம் மாவட்ட இறகுப்பந்து கழகம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் இணைந்து திறம்பட நடத்தினர்.
ஆண்கள் பிரிவில் ஒற்றையர் பிரிவு முதலிடம் அஹமத் யாசின் (தொண்டி),இரண்டாமிடம் கந்தவேல் (முதுகுளத்தூர்),மூன்றாமிடம் கல்யாண் (பரமக்குடி),இரட்டையர் பிரிவு:
முதலிடம் அஹமத் யாசின் (தொண்டி) & தவனேஸ் (பரமக்குடி),
இரண்டாமிடம் கல்யாண் & கந்தவேல்,மூன்றாமிடம் தீபன் & ஹரி (பரமக்குடி),
பெண்கள் பிரிவில் ஒற்றையர் பிரிவு முதலிடம் அட்லின் ஷெரின்,இரண்டாமிடம் நிவேதிதா,
மூன்றாமிடம் தேவிகா, இரட்டையர் பிரிவு முதலிடம் அட்லின் ஷெரின் & திவ்யதர்சினி,
இரண்டாமிடம் நிவேதிதாஅக்ஷயா ,மூன்றாமிடம் தேவிகா பிரசன்னா ஆகியோர் வெற்றி பெற்று சாதனை புரிந்தனர்.
இப்போட்டியின் நிறைவு விழாவில், ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற வீர, வீராங்கனைகளுக்குப் பதக்கங்கள் அணிவித்து, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.இந்நிகழ்வில் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களான ராஜசேகர், அன்வர் ராஜா, குபேந்திரன், யுவவரதன், ரமேஷ், கல்யாண், கணேஷ், சந்தன கவிதா மற்றும் தமீம் அன்சாரி ஆகியோர் உடனிருந்து போட்டிகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.