
புதுச்சேரி: வடமங்கலம் பகுதியில் உள்ள ஸ்ரீ சிவசக்தி வேல்முருகன் ஆலய அங்கன்வாடி மையத்தில், வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி ஏ.எம்.சி. மறுவாழ்வு மையம், ஸ்ரீ சிவசக்தி தர்ம அறக்கட்டளை, ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் மற்றும் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய மாபெரும் நரம்பியல் மறுவாழ்வு மருத்துவ முகாம், இலவச கண் மருத்துவ முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
முகாமிற்கு வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி ஏ.எம்.சி. மறுவாழ்வு மையத்தின் தலைமை நிர்வாகி அர்ஸ்லான் பைக் தலைமை தாங்கினார். ஸ்ரீ சிவசக்தி தர்ம அறக்கட்டளை நிறுவனரும், ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் புதுச்சேரி மாநில தலைவர் கே. ராஜாராம் குமார், புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சி.இ.ஓ. ஹரிதாஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் டாக்டர் சுவேதா, பொது மருத்துவர் விமல் ராஜ், கண் மருத்துவர்கள் ரித்திகா, மிலின்ட், ஜெகன் உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். நரம்பியல் பாதிப்புகள் மற்றும் மறுவாழ்வு சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
முகாம் ஒருங்கிணைப்பாளராக ஜி. பத்மநாபன் செயல்பட்டார். வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி ஏ.எம்.சி. மருத்துவ மையத்தின் மார்க்கெட்டிங் பிரிவு சார்பில் ஜி. பத்மநாபன் மற்றும் இன்சூரன்ஸ் துறை பழனியப்பன் ஆலோசகர் எஸ். கோமதி ஆகியோர் முகாம் ஏற்பாடுகளில் முக்கிய பங்காற்றினர்.
மருத்துவ முகாமிற்கு சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு சிறப்பித்தார்
நிகழ்ச்சியில் புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் வடமங்கலம் சக்திவேல், ஏழுமலை, வில்லியனூர் சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், ஆல் இந்தியா பிரஸ் அண்ட் மீடியா பீப்பிள்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள், சமூக சேவகர்கள் சபரிநாதன், முத்துக்குமரன், ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.
இந்த மருத்துவ முகாமில் வடமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, நரம்பியல் பாதிப்புகள் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள், மறுவாழ்வு சிகிச்சை வழிகாட்டுதல்கள், கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ சேவைகளைப் பெற்றனர்.