எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி காவல் உதவி ஆய்வாளர்களை கண்டித்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்-நீதிமன்றம் முன்பு நடந்தது

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒருங்கிணைத்த நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர் சங்க துணை செயலாளர் கமலி என்பவர் ஒரு வழக்கு தொடர்பாக சீர்காழி காவல் நிலையத்திற்கு சென்றிருந்தபோது அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த உதவி ஆய்வாளர் காயத்ரி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கலியபெருமாய் இருவரும் வழக்கறிஞரை அவமரியாதையாக பேசி அவமானப்படுத்தியதாக குற்றம் சாட்டி, மேற்படி காவல் உதவி ஆய்வாளர்களை கண்டித்து சீர்காழி வழக்கறிஞர் சங்கம் சார்பில் நீதிமன்ற பணி புறக்கணிப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார்.
செயலாளர் கார்த்திக் ராஜன், பொருளாளர் தியாகராஜன், மூத்த வழக்கறிஞர்கள் சுந்தரய்யா, சந்திரமோகன், அப்துல்லா ஷா, மணிவண்ணன், நெடுஞ்செழியன், ராஜேஷ், ராஜேஷ் குமார் மற்றும் இளம் வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் பலர் கலந்துக் கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *