ஜெம் கிரானைட் தொழிலதிபர் தொடர்பாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில், சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிஐடியு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் மதுரை சிம்மக்கல் ஆறுமுச்சந்தி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் ஜென்னியம்மாள் எம். சி., தலைமை வகித்தார். சிஐடியு மாநில செயலாளர் லெனின் ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினார்.
இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டீலன் ஜெஸ்டின், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் பாலசுப்பிர
மணியன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் சசிகலா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் செல்வா நிறைவு செய்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள், ஜெம் கிரானைட் தொழிலதிபர் மீது ஏற்கனவே 2025-ஆம் ஆண்டிலேயே குற்றச்சாட்டுகள் எழுந்ததாகவும், அப்போது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களது அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர். அப்போது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தற்போதைய நிலை ஏற்பட்டிருக்காது என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பில் காவல்துறையும் அரசும் அலட்சியம் காட்டுவதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தொழிலதிபர்
களாகவோ, அரசியல்வாதிகளாகவோ அல்லது வேறு எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர்களாகவோ இருந்தாலும், சட்டப்படி பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்
பட்டுள்ள நிலையில், குற்றச்சாட்டு
களுடன் தொடர்புடைய அனைவரையும் விசாரித்து, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், குற்றச்சாட்டுகளுக்கு துணைபோனதாக கூறப்படும் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீதும் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
இதனிடையே, தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளுடன் உணவுக்
கூடங்களை நடத்துவதற்கான திட்டம் தொடர் பாகவும் ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மதுபானப் பயன்பாடு மற்றும் அதனால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளுடன் உணவுக்கூடங்
களை இணைக்கும் நடவடிக்கை குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.
குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஜெம் கிரானைட் தொழிலதிபர் தொடர்பான குற்றச்சாட்டுகளில் விரைந்து விசாரணை நடத்தி, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில குழு உறுப்பினர் தெய்வராஜ் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் வேல் தேவா, மாதர் சங்க மாநில குழு உறுப்பினர் சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.