தேனி மாவட்டம் சின்னமனூர், கம்பம் உத்தமபாளையம் ஆகிய ஊர்களில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
விழாவில் கம்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னமனூர், கம்பம் மற்றும் உத்தமபாளையம் வட்டாரங்களைச் சேர்ந்த 330 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் வளைகாப்பு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
விழாவில் ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. பேசியது
கர்ப்பிணி பெண்களின் நலனை பாதுகாக்கும் வகையில் 330 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 8 வகையான பொருட்களுடன், சேலை, தாம்பூலத் தட்டு உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
சமுதாய வளைகாப்பு என்பது ஒரு பெண்ணுக்கு அவரது தந்தை வீட்டில் நடத்தப்படும் வளைகாப்பு நிகழ்ச்சியைப் போன்றது. அந்த உணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு சார்பிலும், மக்கள் பிரதிநிதிகள் சார்பிலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அன்போடும், அரவணைப்போடும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள் தங்களது உடல்நலனில் தனி கவனம் செலுத்த வேண்டும். தினமும் எடுத்துக்கொள்ளும் உணவு, மருந்து உள்ளிட்டவற்றை முறையாக எடுத்துக்கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை உட்கொண்டு, மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.
கர்ப்பிணி பெண்களின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்துவதுடன், அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு ஜெகநாத் மிஸ்ரா பேசினார்.
விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் இராவைத்திநாதன் பேசியது கர்ப்பிணி தாய்மார்கள் தங்களது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை நன்றாக பராமரிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி சத்தான உணவுகளை உட்கொண்டு, தேவையான சிறு உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் பதற்றம், கோபம் ஆகியவற்றை தவிர்த்து, மகிழ் வான மனநிலையுடன் இருக்க வேண்டும் இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார்
விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சர்க்கரைப்பொங்கல், எலுமிச்சை சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம் உள்ளிட்ட 5 வகையான கலவை சாதங்கள் வழங்கப்பட்டன.
ஊட்டச்சத்து கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதில் காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள், இரும்புச்சத்து நிறைந்த உணவுகள், கீரை வகைகள் உள்ளிட்ட சத்தான உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
விழாவில் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சையது முகைதீன் இப்ராஹிம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி கம்பம் சின்னமனூர் நகராட்சி ஆணையாளர் உமா சங்கர் உத்தமபாளையம் வட்டாட்சியர் பாலசண்முகம்,
தமிழக வெற்றி கழக மாவட்ட இணைச் செயலாளர் கூடல் செல்வேந்திரன், துணைச் செயலாளர் கதிரேசன், மாவட்ட பொருளாளர் கௌதம், செயற்குழு உறுப்பினர் அய்யர், கம்பம் நகர பொறுப்பாளர் சுப்பிரமணி உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.