மேச்சேரி, காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறை சார்பில் தொழிற்சாலையுடன் கல்விச் சாலை என்னும் பொருண்மையில் கருத்தரங்கம்
25.09.2026 அன்று நடைபெற்றது. வேதியியல் துறை தலைவர் முனைவர் அ. முத்தமிழரசு அவர்கள் வரவேற்புரையாற்றினார். காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பேராசிரியர் ச.செல்வகுமார் அவர்கள் மருந்துத் துறையில் உள்ள பலவிதமான பணிப்பாதைகளும், தொழில் வளர்ச்சியடைவதற்கான ஏராளமான வாய்ப்புகளும் உள்ளன என கூறி தலைமையுரையாற்றினார். நுண்ணுயிரியல் துறை தலைவர் தில்லைநாயகி அவர்கள் சிறப்பு விருந்தினருக்கான அறிமுக உரையாற்றினார்.


சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சவுத் ஈஸ்ட் ஏசியா, சர்வீஸ் டெலிவரி லெட்- இந்தியா & சீனியர் ப்ராஜெக்ட் மேனேஜர் மற்றும் பெங்களூரு, தெர்மோ ஃபிஷர் சயின்டிஃபிக் INC., திரு. மா.கோபாலன் அவர்கள் மருந்து விரிவாக்கத் திறன், ஒழுங்குமுறைத் தயார்நிலை மற்றும் சந்தைக்கு விரைவாகக் கொண்டுவருதல் ஆகியவற்றை பற்றியும், தற்போது உள்ள மருந்து ஆய்வியலில், நுண்ணியிரியல் மற்றும் வேதியியலின் எழுச்சி பற்றியும், புதிய தொழில்நுட்பங்களைக் கொண்ட வசதிகளை ஆய்வு செய்வதிலும் மற்றும் ஆய்வக அடிப்படையிலான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மருத்துவப் பரிசோதனைகள், ஒழுங்குமுறை விவகாரங்கள், மருந்துப் பாதுகாப்பு, உற்பத்தி, பொறியியல், தர உறுதிப்பாடு, தரக் கட்டுப்பாடு மற்றும் சரிபார்ப்பு ஆகியவற்றிலிருந்து தொடங்கி, சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் விநியோகம் வரை பல்வேறு வகையான பணி வாய்ப்புகள் பற்றிய உரையை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.


இந்நிகழ்வில் காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவ தலைவர் நடேசன், தலைவர் அன்பழகன், செயலாளர் பேராசிரியர் இளங்கோவன், தாளாளர் இராமநாதன்,துணைத்தலைவர் மதன் கார்த்திக், இணைச்செயலாளர் ஹரிசங்கர், ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன், மாணவர் சேர்க்கையின் புல முதன்மையர் பேராசிரியர் நந்தகுமார், அனைவரும் கலந்து கொண்ட மாணவர்களுக்கு வாழ்த்தினைத் தெரிவித்தனர். நிகழ்வின் நிறைவாக வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் ம. சன்மதி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *