மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் கச்சா எண்ணெய் மூலம் பெட்ரோல், டீசல் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 8ஆம் தேதி நாகப்பட்டினத்தில் இருந்து தனியார் ட்ரான்ஸ்போர்ட் லாரியின் மூலம் மணலி சிபிசிஎல் நிறுவனத்துக்கு 30 ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் கொண்டுவரப்பட்டது. பின்னர் கச்சா எண்ணையை இறக்கிய பின், அதிகாரிகள் அந்த கச்சா எண்ணையின் தரம் குறித்து ஆய்வு செய்தபோது அதில் கச்சா எண்ணெயில் பெரும் அளவு திருடிவிட்டு அதில் தண்ணீர் கலந்து இருந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த நிறுவன அதிகாரிகள் இதுகுறித்து லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் கமலக்கண்ணன் என்பவரிடம் விசாரணை செய்தனர். அப்போது அந்த லாரியை ஓட்டி வந்தவர் திருவாரூரை சேர்ந்த மகேந்திரன் 37 என்ற ஓட்டுனர் என்பதும் அவர் தலைமாறாகி விட்டார் என்பதும் தெரிய வந்தது.
இதை அடுத்து கமலக்கண்ணன் மணலி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து திருவாரூர் பதுங்கி இருந்த லாரி ஓட்டுநர் ஓட்டுநர் மகேந்திரன், இவரது கூட்டாளியான பன்னீர்செல்வம் வயசு 34 ஆகிய இருவரை கைது செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் நாகப்பட்டினத்தில் இருந்து கச்சா எண்ணெய் லாரியில் கொண்டு வரும்போது இடையில் வடலூர் என்ற இடத்தில் லாரியை நிறுத்தி, அதிலிருந்து இவர்கள் இருவரும் 26,000 லிட்டர் கச்சா எண்ணையை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக தண்ணீரை நிரப்பி நிறுவனத்திற்கு கொண்டு வந்ததும் இவ்வாறு லாரியில் எடுக்கப்பட்ட கச்சா எண்ணெய் இடைத்தரகர்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதை அடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்